நாமக்கல், டிச.22- நாமக்கலில் சபரிமலை சீசன் உள்ளிட்ட பல்வேறு காரணகளால் வாழை இலை பயன்பாடும், விலை யும் கணிசமாக அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் வாழை இலை விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளது. மேலும் பரமத்தி வேலூரில் வாழைமரம், வெற் றிலை, தென்னை உள்ளிட்ட விவ சாயப்பணிகள் அதிகம் நடைபெறும் பகுதிகளாகும். தமிழகத்தின் பல் வேறு பகுதிகளுக்கும் வாழை இலைகள், வெற்றிலைகள், பர மத்தி வேலூர் உள்ளிட சுற்றுவட் டார பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில், சபரிமலை சீசன், தை மாத துவக்கம் உள்ளிட்ட பல் வேறு காரணகளால் வாழை இலை யின் தேவை மற்றும் விலை கணிச மாக அதிகரித்துள்ளதாக வாழை இலை வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து பள்ளிபாளையம் நாமக்கல் சாலையில் வாழை இலை கடை நடத்தி வரும் வியா பாரி சின்னசாமி கூறும் பொழுது, முன்பை காட்டிலும் தற்போது வாழை இலையின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், குறைந்து வரும் விவசாயத்தின் காரணமாக வாழை இலை கிடைப்பதில் அப்போது தட்டுப் பாடு ஏற்பட்டு, விலையும் கணிச மான உயர்ந்து வருகிறது. வாழை இலைக்கு மாற்றாக பாக்கு மட்டை தட்டுகள் பயன்பாடு சமமான அளவில் இருந்தாலும், கூடுதல் செலவானாலும் பரவா யில்லை பல்வேறு சுப நிகழ்ச்சிக ளுக்கும் இதர பொதுவான நிகழ்வு களுக்கும் பெரும்பாலானோர் இன்னமும் பாரம்பரிய முறையில் வாழை இலை பயன்படுத்து வதையே விரும்புகின்றனர். சரா சரியாக டிபன் இலை ஏழு ரூபாய் முதல், சாப்பாட்டு இலை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையி லும், துண்டு இலைகள் 20 முதல் 30 ரூபாய் வரையிலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகி றது. இதுபோக தினம்தோறும் சாலையோர கடைகள், உணவகங் கள் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளுக்கு வழங்கப்படும் வாழை இலைகளும் தினம்தோறும் அன் றைய தினத்தில் விலைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் சபரிமலை சீசன் காரண மாக பெரும்பாலானோர் தற்போது மாலையிட்டு விரதம் மேற் கொண்டு வருகின்றனர். இதன் கார ணமாக பூஜை பயன்பாடு உள் ளிட்ட பல்வேறு காரணங்களால் வாழை இலையின் தேவை கணிச மாக அதிகரித்துள்ளது.
அதேபோல எதிர்வரும் தை மாதத்தில் பழனி மலை முருகன் கோவிலுக்கு நடைபயணமாக பக் தர்கள் செல்வார்கள். அதற்கும் அவர்கள் விரதம் இருப்பார்கள் என்பதால், வாழை இலை தேவை அதிகமாக இருக்கும். இதனையடுத்து பொங்கல் பண்டிகையிலும், தை மாதத்திற்கு பிறகு வரும் விசேஷ நாட்களில் அதிக அளவு கல்யாண முகூர்த்தங் கள் இருக்கும் என்பதாலும், விசேஷ பயன்பாடுகளுக்கு வாழை இலையை அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்துவார் கள். அதன் அடிப்படையில் ஜனவரி மாதம் இறுதி வரை வாழை இலை யின் தேவை அதிகரித்தே காணப்ப டும். இதன் காரணமாக கணிசமான அளவில் வாழை இலையின் விலை யும் அதிகரித்துள்ளது. கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர் களுக்கு ஏற்ப விலையை அனுச ரித்து தந்து கொண்டிருக்கிறோம் என கூறினார். - எம்.பிரபாகரன்
