districts

img

நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம்

நாமக்கல், ஜன.24- பள்ளிபாளைம் அருகே நீர்நிலை யில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற் படும் கடும் துர்நாற்றத்தால் பொதுமக் கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தை அடுத்த காடச்சநல்லூர் பகுதி, திருச்செங்கோட்டை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. காடச்ச நல்லூர் பேருந்து நிறுத்த பகுதி அருகே உள்ள மழைநீர் கால்வாய்களில் கொட் டப்படும் இறந்த கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் நீரில் மூழ்கி அப்பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக் கழிவுகள் அடங்கிய மூட்டைகள் தண்ணீ ரில் மிதந்து செல்ல முடியா வண்ணம் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற் கிறது. தேங்கியுள்ள நீரில் இறைச்சி  கழிவுகள் கலப்பதால் கொசு உற்பத்தி யாகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல்  மற்றும் உடல் உபாதைகள் ஏற்படு கிறது. கால்வாயின் அருகே பேருந்து  நிறுத்தம் இருப்பதால் பள்ளிக்குச் செல் லும் மாணவ மாணவியர்கள் துர்நாற் றத்தை தாங்க முடியாமல் வாந்தி, மயக்கத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், இப்பகுதியில் இயங்கும் உணவகங்கள், பேக்கரி கள், துர்நாற்றத்தின் காரணமாக சில சமயங்களில் கடைகளை திறக்க முடி யாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன. எனவே, உடனடியாக ஊராட்சி நிர்வா கம் தொடர்ந்து இப்பகுதியில் கோழிக் கழிவுகளை கொட்டும் நபர்களை கண்ட றிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். தொடர்ந்து இறந்த கோழிகள் மற் றும் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். குப்பைகள் மற் றும் கழிவுகளை கொட்ட தனி ஒரு  இடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.