districts

img

இளம் கவிஞர் காளிமுத்துவிற்கு சாகித்ய அகாடமி “யுவ புரஷ்கர் விருது”

ஒன்றிய அரசின் சாகித்ய அகாடமி அமைப்பால் எழுத்தாளர்களுக்கு வழங்கப் பபடும் “யுவ புரஷ்கர் விருது” கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பில் சின்னாம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் ப.காளிமுத்துவிற்கு 2022 ஆம் ஆண் டிற்கான விருதினை புதனன்று அறிவித் துள்ளது. இதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள  பில்சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலிகளான பழனிச்சாமி -  சரஸ்வதி தம்பதியினர். இவர்களது மகன் காளிமுத்து (25), பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் பிஎஸ்சி (கணினி அறிவியல்) இளங்கலை பட்டப்படிப்பு பயின்றார். 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து படிக்க ஆரம்பித்துள்ளார்.

பொள் ளாச்சி இலக்கிய வட்டத்தில் தனது கவிதை களை வாசிக்க ஆரம்பித்து தனது பயனத்தை துவங்கியுள்ளார். தற்போது தனது முதல் படைப்பான “தனித்திருக்கும் அரளிகளின் மதி யம்” எனும் கவிதை தொகுப்பிற்கு யுவ புரஷ்கர் விருதை பெற்றுள்ளார்.  இதுகுறித்து கவிஞர் காளிமுத்து கூறுகை யில், எனது முதல் மேடையும், முதல் கவிதை யும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்புதான். பொள்ளாச்சி இலக் கிய வட்டத்தின் நிர்வாகிகள் தன்னை எழுத் தாளனாக மாற்றினர். கோவை மற்றும் பொள் ளாச்சி  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கமும், கோவை இலக்கிய சந்திப்பு உள்ளிட்ட இலக்கிய தொடர்புகள் தன்னை உத்வேகத்துடனும் எழுதத்தூண்டி யது.  “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்”  எனும் கவிதை தொகுப்புதான் தான் எழுதிய  முதல் கவிதை தொகுப்பு ஆகும். இதனை உருவாக்க கவிஞர்கள் அம்சப்ரியாவும், பூபாலனும் பல உதவிகளை செய்தனர். இந்த சாகித்ய அகாடமியின் “யுவ புரஷ்கர்  விருது” என்னை இன்னும் எழுத தூண்டுகி றது. புதிய புத்துணர்ச்சியை எனக்குள் ஏற் படுத்தியுள்ளது, என்றார்.