தருமபுரி, ஜன.1- பொம்மிடி ஆணைமடுவு அணைக்கட்டு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில், ஏற்காடு மலையின் அடிவாரத்தில் ஆணைமடுவு அமைந்துள்ளது. ஏற்காடு மலைகளில் பெய் யும் மழைநீர், மலைகளில் உருவாகும் ஊற்று நீரை கொண்டு உருவாகும் வேப்பாடி ஆறு, ஆணைமடுவு பகுதியில் தேங்கு கிறது. ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆணைமடுவு பகுதியில் ஆங்கிலேயர்களால் சிறிய தடுப்பணை கட்டப்பட் டது. ஆணை மடுவு அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசா யிகள் வலியுறுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டில் அணை கட்டுவதற்கான ஆய்வுகள் நடந்தது. அதன்பிறகு 20 ஆண்டு களாக நடவடிக்கை எதுவும் இல்லை. தருமபுரி மாவட்ட ஆட்சி யர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கடந்தாண்டு ஆய்வு செய்தனர். ஆய்வோடு இப்பணி நின்று விட்டது. கடந்த சில தினங்களாக ஏற்காடு பகுதி களில் பெய்த மழையால் ஆணைமடுவு பகுதிக்கு அதிகளவு தண்ணீர் வந்து, வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. வேப்பாடி ஆற்றில் அணைகள், அணைக்கட்டுகள் எது வும் இல்லாததால் அங்கிருந்து பிரிந்து, பாம்பாற்றின் வழி யாக சேலம் மாவட்டம் கே.என்.புதூர், ஆர்.எம்.நகர் ஏரி களுக்கு சென்று ஏரிகள் நிரம்பி, தொப்பையாறு அணைக்கு செல்கிறது. இதனால் தருமபுரி மாவட்ட மக்களுக்கு எவ்வி தத்திலும் நன்மையும் இல்லை. எனவே, ஆணைமடுவு அணையை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.