திருச்சிராப்பள்ளி, ஏப்.28-ஆசிய தடகளப் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி மேலகல் கண்டார் கோட்டையைச் சேர்ந்த அங்கமுத்து மகன் மணிமாறன் (46) ஞாயிறன்று ரயில் மூலம் திருச்சிவந்தார். அவருக்கு, பயிற்சியாளர்கள், ஊர்மக்கள் மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதன்பின் மணிமாறன், நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிய தடகளப் போட்டியில் 74 கிலோ எடை பிரிவில் 567.5 கிலோ பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றேன். மேலும் இரும்பு மனிதன் பட்டம் வென்றுள்ளேன். நான் பட்டப்படிப்பு படித்துள் ளேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழக வனத்துறையில் ஓட்டுநராக எனக்கு பணி வழங்கினர். எனக்கு தகுதி இருந்தும் ரேஞ்சர் பதவி வழங்காமல் உயரம் சற்று குறை வாக இருப்பதால் டிரைவர் பணி வழங்கினர். புதுக்கோட்டையில் டிரைவராக பணியாற்றி வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள்உள்ளனர். எனது வருமானத்தில் குடும்பத்தை பார்த்து கொண்டு செலவுசெய்து பயிற்சி மேற்கொள்வது என்பது மிகவும் கடினமாக உள்ளது. என்னை ஊக்குவித்து ரேஞ்சர் பதவி வழங்க வேண்டும். தமிழக அரசு நிதி யுதவி அளித்தால் வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன். அரசு, அனைத்துத் துறை விளையாட்டிற்கும் ஒரே மாதிரியான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் போட்டியில் பங்கேற்காமல் வெளி யிலேயே நிற்கிறார்கள். அரசு ஊக்குவித்தால் என்னை போல் நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாகுவார்கள். 2018ல் முதன் முதலில் ஆசியன் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன். இதை நான் பணியாற்றும் துறை மூலம் அரசுக்குதெரிவித்தும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. எனது குடும்பத்தினர் மற்றும் ஜிம் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரிலேயே இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளேன். இவ்வாறு மணிமாறன் கூறினார்.