districts

img

அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்க: சிஐடியு மறியல்

தருமபுரி, ஜூலை 12- அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வலி யுறுத்தி சிஐடியு ஊரக உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் சார்பில் புதனன்று மறியல் போராட் ட்டம் நடைபெற்றது. நிரந்தரமற்ற வேலைக்கான அரசாணை களை ரத்து செய்ய வேண்டும். 50 வயது கடந்த தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நவீன கொத் தடிமைகளாக்கும் அவுட்சோர்சிங் முறையை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் புதனன்று மாநிலம்  தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, தலைமை தபால் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இதன் பின் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐ டியு மாவட்ட தலைவர் சி.நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம் மாள், ஊரக உள்ளாட்சி பணியாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் குட்டியப்பன் ஆகி யோர்  கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், பென்னாகரம் பேரூராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் சண் முகம், மாவட்ட பொருளாளர் எஸ்.சண்முகம், மாவட்ட நிர்வாகி சி.ராஜூ உட்பட பலர் கலந்து  கொண்டனர். கம்பைநல்லூர் பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ஆனஸ்ட்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாவட்ட இணைச்செயலாளர் ஜெய ராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகேந்தி ரன், மணி, ரகுபதி ஆகியோர் கலந்து கொண்ட னர். பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கவிதா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கிட்டு (எ) சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முரளி, மனோன்மணியம் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் பழனிச்சாமி தலை மையில் போராட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சி.சேகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செய லாளர் சி.வினோத், மாவட்ட தலைவர் எல்.சங்கர லிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க பொருளாளர் ரவி உட்பட 200க்கும் மேற் பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட னர். முடிவில், ஆறுமுகம் நன்றி கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன், பொருளாளர் கே.கே.செந்தில் குமார், உதவித்தலைவர்கள் என்.முருகையா, கே.மாரப்பன், உதவிச்செயலாளர்கள் கே.பிஜூ,  பி.ஸ்ரீதேவி, செந்தில்குமார், எஸ்.மாணிக்கம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.