நாமக்கல், நவ.5- ரசீதில் காலாவதி தேதி மற்றும் நுகர்வோரின் பெயர் குறிப்பிடா மல், உணவுப் பொருட்களை விற் பனை செய்வதற்கு பிரபல கடைக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், சந்தைப் பேட்டை புதூரைச் சேர்ந்தவர் ஆறு முகம் (66). இவர் கடந்தாண்டு செப் டம்பர் மாதம், கோவையில், சத்தி சாலையிலுள்ள பிரபல தனியார் ஸ்வீட் அண்ட் பேக்கரி கடையில் (ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்ஸ், 45 பி, பாரதி நகர் பேருந்து நிறுத்தம், சக்தி ரோடு, கணபதி அஞ்சல், கோவை) ரூ.134 செலுத்தி 200 கிராம் மைசூர்பா வாங்கியுள் ளார். அப்போது அவரது பெயரில் ரசீது தருமாறு கேட்டதற்கு, கடை யின் பணியாளர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்வீட்ஸ் எந்த தேதியில் காலாவதி ஆகிறது? என்பது குறிப்பிடப்படவில்லை எனக்கூறப்படுகிறது. உணவுப் பொருளை விற்பனை செய்த கடைக்காரரின் செயல், நுகர் வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதி ரானது என்பதால், கடைக்காரர் சேவை குறைபாடு புரிந்து விட்ட தாக தெரிவித்து, இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆறுமுகம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசா ரணை முடிந்த நிலையில், செவ்வா யன்று நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகி யோர் தீர்ப்பு வழங்கினர். அதில், உணவுப் பொருள் விற் பனையாளர் தரப்பில், தங்கள் கடை யில் வழங்கப்படும் ரசீதுகளில் நுகர் வோரின் பெயரை குறிப்பிட்டு ரசீது வழங்கும் வழக்கம் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு பொது விதிகளில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வழங்கப்படும் ரசீது எவ்வாறு இருக்க வேண்டும்? என்று விளக்கப்பட்டுள்ளது. இதன் படி பணம் செலுத்தி பொருளை வாங்கும் நுகர்வோரின் பெயரை குறிப்பிட்டு விற்பனையாளரால் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால், உணவுப் பொருள் விற்ப னையாளர் இந்த விதி அமலுக்கு வந்த 2020 ஆண்டிலிருந்து தற் போது வரை பின்பற்றாமல் இருந்து வந்துள்ளார் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத் தின் (food Safety and Standards Authority of India) உத்தரவுப்படி, உதிரியாக (loose) இனிப்பு மற்றும் கார வகை உணவுப் பொருட்களை தட்டில் வைத்து விற்பனை செய்யும் போது விற்கப்படும் உணவுப் பொருள் எந்த தேதிக்குள் உண்ண உகந்தது? (best before) என்று எழுதி வைக்கப்பட வேண்டும். உணவுப் பொருள் விற்பனையாளர் தரப்பில் தாக்கல் செய்த கடையில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை விற்பனை யாளர் மீறியுள்ளார் என்பதும் நிரூ பிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கு தாக்கல் செய் தவருக்கு உணவுப் பொருளை விற்பனை செய்த கடை நிர்வாகம், இந்தாண்டின் நவம்பர் மாத இறுதிக் குள்ளாக இழப்பீடாக ரூ.8 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தமாக ரூ.10 ஆயிரத்தை வழங்கவும், அடையா ளம் தெரியாத நுகர்வோர் பாதிக் கப்பட்டிருப்பதால் நுகர்வோர் நல னுக்காக ரூ.20 ஆயிரத்தை மாநில நுகர்வோர் நிதியத்தில் நவம்பர் இறுதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், உணவுப் பொருளை விற்ற கடையில் நுகர்வோரின் பெயரை குறிப்பிட்டு ரசீது வழங்காமலும், உதிரியாக விற்கப்படும் உணவுப் பொருள் வைக்கப்பட்டுள்ள தட் டில் காலாவதி தேதியை குறிப்பிட்டு காட்சிப்படுத்தாமலும், உணவுப் பொருட்களை விற்க தடை விதித் தும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது.