districts

img

சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து ஏற்காடு அடிவாரம் மார்டன் தியேட்டர் வரை 8 கி.மீ.  தூரம் நடைபயிற்சி

சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து ஏற்காடு அடிவாரம் மார்டன் தியேட்டர் வரை 8 கி.மீ.  தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிபடுத்துவதற்கான பணி குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆட்சியர் செ.கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பி னர்கள் ரா.ராஜேந்திரன், ரா.அருள், எஸ்.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஞாயிறன்று தருமபுரி மாவட்டத்திலும், நடைபயிற்சிக்கான இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதில், தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.