districts

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதம் போனஸ்

நாமக்கல், அக். 4- விசைத்தறி தொழிலாளர்களுக்கு இருபது சதம் போனஸ் வழங்க வேண் டும் என சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்  காவேரி ஆர்.எஸ் சிஐடியு அலுவலகத் தில் வெள்ளியன்று நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட் டத் தலைவர் கே.மோகன் தலைமை ஏற் றார். மாவட்டச் செயலாளர் எம்.அசோ கன், மாவட்டப் பொருளாளர் முத்துக் குமார், மாவட்ட உதவித் தலைவர் பாலு சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நாமக்கல் மாவட்டத்திற் குட்பட்ட பள்ளிபாளையம், குமாரபாளை யம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதி களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள் விசைத்தறி தொழி லில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த தொழிலாளர்க ளுக்கு ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் வழங்கப் பட்டு வருகிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தீபாவளி  போனஸ் ஒப்பந்தம் அரசு அதிகாரி கள், தொழிற்சங்க நிர்வாகிகள், ஜவுளி  உரிமையாளர்கள் என முத்தரப்பு  கூட்டமாக நடைபெற்று, அதில் முடிவு கள் அமலாகும். இந்நிலையில், தற்போது விசைத் தறி தொழிலாளர்களுக்கு 9 சதம் போனஸ் கடந்த 10 ஆண்டுகளாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு  போனஸ் தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும். தீபாவளி பண்டி கைக்கு 15 நாட்கள் முன்பே வழங்கிட  வேண்டும். போனஸ் கோரிக்கை தொடர்பான மனுக்களை அதிகாரிக ளுக்கும், ஜவுளி உற்பத்தியாளருக்கும் அனுப்பி பேச்சுவார்த்தை மூலம்  போனஸ் ஒப்பந்தத்தை அமல்படுத் துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  மேலும் 20 சத போனஸ் கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங் கள், தெருமுனை கூட்டங்கள், ஆட்டோ  பிரச்சாரம், அதிகாரிகளை சந்தித்து மனு  வழங்குவது உள்ளிட்ட பல்வேறு இயக் கங்கள் நடைபெற உள்ளதாக சங்க நிர் வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட் டத்தில் திரளானோர் கலந்து கொண்ட னர்.