திருப்பூர், அக்.7 - திருப்பூர் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் கே.எஸ். கருப்பசாமியின் 15ஆவது நினைவு தினம் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. கோவை மற்றும் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்க இயக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற் றிய மூத்த தலைவர் கே.எஸ். கருப்பசாமி யின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் திங்களன்று திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தின் முன்பாகவும், அனுப்பர்பா ளையம் பாத்திர தொழிலாளர் சங்கத்தின் முன்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. தியாகி பழனிச்சாமி நிலையத்தின் முன்பாக நடைபெற்ற நிகழ்விற்கு கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன் தலைமையேற்றார். தோழர் கேஎஸ்கே அவர்களின் பணியை நினைவு கூர்ந்து கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோ பால், கே.ரங்கராஜ், ஆர்.குமார், எஸ் சுப்பிரம ணியன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். அனுப்பர்பாளையம் பாத்திர சங்கத்தின் முன்பாக நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத் திற்கு பாத்திர தொழிலாளர் சங்கச் செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் முத்து கண் ணன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் ராஜகோபால், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் கே எஸ் ்கருப்ப சாமி யின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர். இதில் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், பாத்திர சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.