districts

img

விளாத்திகுளம் அரசுப் பள்ளியின் 125-வது ஆண்டு விழா

தூத்துக்குடி, ஏப்.28-தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வாதலக்கரை முத்துசாமி இந்து துவக்கப் பள்ளி 125-வது ஆண்டு விழாவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்து பள்ளி விழாமலரினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ஒரு கிராமத்தில் உள்ள மாணவ,மாணவிகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இங்கு 125-வது ஆண்டுகளுக்கு முன் பாக இப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. 125-வது ஆண்டுகளுக்கு முன்பு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் இந்த பள்ளியில் பல்வேறுபகுதியில் உள்ள மாணவர்கள் கல்விபயின்று இன்று வாழ்வில் நல்ல நிலையில் உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ளமாணவ, மாணவிகள் 100 சதவீத கல்வியறிவு பெற வேண்டும். இந்த பள்ளியின் 150-வது ஆண்டு விழாவின்போது இப்பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாக மாற்ற பள்ளி நிர்வாக கமிட்டியினர் முயற்சிமேற்கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில், பள்ளி ஓய்வு பெற்றதலைமை ஆசிரியர் கேசவன், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, வ.உ.சி. அவர்களின் வாரிசு வ.சிதம்பரம், மகாகவிபாரதியாரின் கொள்ளு பேரன் நிரஞ்சன்பாரதி, நேதாஜி இயக்க தலைவர் சுவாமிநாதன், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல், மத்திய நிலத்தடி நீர் நிர்வாக பொறியாளர் (ஓய்வு)சுந்தர மகாலிங்கம், பள்ளி தலைமைஆசிரியை கவிதா மற்றும் பொதுமக்கள்,முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.