உலக மண்வள தினம்
600 மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
மயிலாடுதுறை, டிச.6 - புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையிலும், மழை பெய்ய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் உலக மண் வள தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் உலக மண் வள தினத்தையொட்டி, மயி லாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவிகாப்பு இயக்கம் சார்பில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமையாசிரி யர் ரமா, புவி காப்பு இயக்க நிர்வாக அறங்காவலர் இரணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 600 மாணவிகளுக்கு சந்தனம், செம்மரம், மகாகனி, தேக்கு, வேங்கை, தென்னை, பனை, பலா நெல்லி, வேம்பு உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
முன்னதாக செம்பனார்கோயில அரசு மருத்துவ மனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
பாபநாசம், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில், மழை ஏற்படுத்திய சீதோஷ்ண நிலையால் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
இதை கட்டுப்படுத்தும் வழிமுறை பற்றி பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் முகமது பாரூக் தெரிவிக்கை யில், “பாபநாசம் வட்டாரத்தில் 5000 ஹெக்டேர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நிலவும் சீதோஷ்ண நிலையில் பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் பரவலாகக் காணப் படுகிறது.
இந்த ஈ மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவைப் போல் சிறிய தாக நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். நெல் நடவு செய்து 35 முதல் 40 நாட்களில் புழுக்களின் தாக்குதல் காணப்படும். புழு வளர்கிற தூர்களின் உட்பகுதிக்குச் சென்று, வளர்கின்ற பாகத்தை உணவாக உட்கொள்ளும். தாக்கப்பட்ட தூர்கள் வெண்மையாகி, இலைகள் வராமல் வெங்காய இலை போல் மாறிவிடும். பாதிக்கப்பட்ட தூர்கள் யானைத் தந்தம் போல் இருப்ப தால் இதற்கு ஆனைக் கொம்பன் என பெயரிடப்பட்டது.
தாக்கப்பட்ட தூர்களிலிருந்து, கதிர்கள் வெளி வராமல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கார்போ சல்பான் 25 சதவீதம் ஈசி 400 மி.லி அல்லது தையோ மீதாக்சோம் 25 சதவீதம் அல்லது டபிள்யூஜி 100 கிராம் அல்லது பிப்ரோனில் 5 சதவீதம், எஸ்சி 250 மி.லி இட லாம். மேலும் அறுவடைக்குப் பின் வயலை நன்கு உழவு செய்வதன் மூலம் தழைச் சத்தை அதிகமாக இடாமலும், பயிரினை ஈ தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்” என்றார்.
கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தஞ்சை எஸ்.பி. ஆய்வு
பாபநாசம், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆசிஸ் ராவத் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார். ஆய்வின்போது பாபநாசம் துணை கண்காணிப் பாளர் முருகவேலு, கபிஸ்தலம் ஆய்வாளர் மகா லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.