சென்னை, ஜூன் 27- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் பம்ப் ஹவுஸ் கட்ட திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறை படுத்த குடியிருக்கும் வீடுகளை அகற்றிட மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கட்டுமானத் தொழிலாளர்கள், பட்டியல் இன மக்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதி யில் பம்ப் ஹவுஸ் கட்டுவதில் மக்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் பம்ப் ஹவுஸ்க்கு தேவையான காலியிடம் இருக் கும்போது குடியிருப்புகளை ஏன் அகற்ற வேண்டும். அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறினர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் அதிகாரிகளை சந்தித்து மக்க ளின் குடியிருப்புகளை அகற்றாமல் பம்ப் ஹவுஸ் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினரிடமும் பகுதி மக்களின் கோரிக்கையை எடுத்துரைத்தார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் திங்களன்று (ஜூன் 27) பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அதிகாரிகளை அப்பகுதிக்கு வரவழைத்து குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பம்ப்ஹவுஸ் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் ஒப்புக்கொண்டு குடியிருக்கும் வீடுகளுக்கு சேதாரம் இல்லாமல் காலியாக உள்ள இடத்தில் பம்ப் கட்டுவது என இதில் முடிவு செய்யப்பட்டது. இதனால் பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பி னர் சங்கர், மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். கிராம தலைவர் முத்து, செயலாளர் அழகிரி, வழக்கறிஞர் ஜெயசங்கர், சிபிஎம் பகுதி செயலாளர் கதிர்வேல், மாதர்சங்க மாவட்ட செயலாளர் பாக்கியம், சிபிஎம் பகுதிகுழு உறுப்பினர் வெங்கட்டையா ஆகியோர் உடனிருந்தனர்.