districts

img

வீராங்கல் ஓடை சீரமைப்பு விரைவுப்படுத்தப்படுமா?

சென்னை, செப். 3 - வீராங்கல் ஓடை சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழைக் காலங்களில் வேளச்சேரி, ராம்நகர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, ஏஜிஎஸ் காலனி, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் தேங்கும் வெள்ளம் வீராங்கல் ஓடை வழி யாக சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கலக்கிறது. இந்த ஓடையில் கழிவு நீர் கலப்ப தோடு, ஒரு சில இடங்களில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாய் தூர்ந்து ஆகாய தாமரை, கோரை உள்ளிட்ட செடி, கொடிகள் வளர்ந்து நிற்கின்றன. இதனால் கழிவுநீர் மற்றும் மழை வெள்ளம் தடைபட்டு தேங்கி நிற்கிறது. அதிலி ருந்து பெருமளவு கொசு உற்பத்தியாகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கால்வாயி லிருந்து எழும் துர்நாற்றம் குடியிருப் போருக்கு ஒவ்வாமையை உருவாக்குகிறது. எனவே, இந்த ஓடையை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரி வந்தனர். இதனையடுத்து நீர்வளத் துறை சார்பில் வீராங்கல் ஒடையை தூர்வாரி சீரமைத்து, பக்கவாட்டு தடுப்புச் சுவர் அமைக்க சுமார் ரூ14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி அண்மையில் தொடங்கப்பட்டது. இருப்பினும் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடை பெறுகின்றன. பருவ மழைக்கு முன்பாக முழுமையாக கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.