நிலம், நீர்,காற்று,ஆகாயம், நெருப்பு என்ற ஐந்துபெரும் சக்திகளால் சூழப்பட்ட இந்த பூமிப்பந்தை சில சுயநல சக்திகள் தங்கள் லாபத்திற்காக பாழ்படுத்தி வருகின்றன. இயற்கையை நிந்தித்தால் சரியான தருணத்தில் அதற்கான பாதிப்பை மனித குலம் பெறும் என நம்முன்னோர்கள் உரைத்துச் சென்றிருக்கின்றனர். இயற்கையை பாதுகாக்காமல் மருத்துவக் கழிவுகளை மண்ணில் கொட்டி நம் வருங்கால சந்ததியின் ஆரோக்கியத்தை கேள்விக்குறி யாக்கும் சம்பவம் திருமங்கை ஆழ்வாரத்தில் ஜே.கே. கல்குவாரிக்கு அருகில் நடந்து வருகிறது. சென்னை பெருநகரத்தில் நாளொன்றுக்கு 60 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகிறது. அந்த கழிவுகளை பாதுகாப்பாகவும், முறையாகவும் அகற்றுவதற்கு அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. மருத்துவக் கழிவு களை அகற்றுவதை கண்காணிப்பதற் கென்று, மாவட்ட ஆட்சியர் தலைமை யில் ஒரு கண்காணிப்பு குழுவும் செயல்படுகிறது.இவற்றை யெல்லாம் மீறி 15 டன் மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில், ஆபத்துகளை விளை விக்கும் வகையில் திறந்த வெளி யில், நீர்நிலைப் பகுதிகளில் கொட்டப் படுகிறது. தனியார்களின் அலட்சியம் தமிழகத்தில் மருத்துவக் கழிவு களைக் கையாள 10 நிறுவனங்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை கையாள்வ தற்கு செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே. மல்டிகிளேவ் பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறு வனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உருவாகும் அனைத்து மருத்து வக்கழிவுகளையும் நிறுவனங்களி டம்தான் நிர்வாகங்கள் ஒப்படைக்க வேண்டும். ஆனால், “பெரும்பா லான பன்நோக்கு, உயர், தனி யார் மருத்துவமனைகள் இவ்வாறு தங்களது கழிவுகளை முறை யாக அகற்றுவதில்லை” என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மருத்துவ கழிவுகள் தேக்கம்
சென்னை மாநகராட்சி பகுதி களில் 800க்கும் மேற்பட்ட சுகா தார நிலையங்கள், மருத்துவமனை கள் உள்ளன. இந்த “மருத்துவமனை களில் அனுமதிக்கப்படும் ஒரு நோயாளியிடம் இருந்து சராசரியாக 2 கிலோ வரை மருத்துவக் கழிவுகள் உருவாகிறது. அவற்றை சேகரித்து கண்டெய்னர்களில் கொட்டுவதோடு எங்களது பணி முடிந்துவிடுகிறது. அதன்பிறகு, அந்த கழிவுகள் எங்கு கொண்டு செல்கின்றனர், எவ்வாறு அழிக்கின்றனர் என்பன போன்ற விவரங்கள் தெரியாது. அது அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு மட்டுமே தெரியும்” என்று மருத்துவப் பணியாளர்கள் தெரி விக்கின்றனர்.
மாசடையும் நிலத்தடிநீர்
மருத்துவமனைகளில் உரு வாகும் ஆபத்தான, நோய்களை பரப்பக்கூடிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுகிற நிகழ்வும் நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் இத்தகைய மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. குறிப்பாக, திருமங்கை ஆழ்வார் புரம் கல்குவாரிகளில் அதிக அளவில் மருத்துவ கழிவு கள் கொட்டப்பட்டுள்ளது. குவாரி களையொட்டியும், சாலைகளின் இருபுறங்களிலும் மருத்துவ கழிவு கள் மற்றும் பிற கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அந்த சாலைகளை கூட பயன்படுத்த முடியாத நிலை அவ்வப்போது நிகழ்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குவாரிகளில் உள்ள தண்ணீருடன் மருத்துவ கழிவுகள் கலந்து நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இவற்றின்காரணமாக அப்பகுதி மக்கள் பல வகையான தொற்று நோய், உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையோரங்களில் மரண கழிவுகள்
“பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருந்து, இரவு நேரங்களில் கொண்டு வந்து மருத்துவ கழிவுகளை சாலைகள், குவாரிகளில் கொட்டுகின்றனர். ரசீது, சீட்டுகள் போன்ற காகிதக் கழிவு
களுக்கு உடனடியாக தீ வைத்து எரித்து விடுகின்றனர். பயன்படுத்திய ஊசிகள், மருத்துவ குப்பிகள், கையுறைகள், முகக்கவசம், நோயாளிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள் போன்ற வற்றை அப்படியே கொட்டிவிட்டு செல்கின்றனர்” என்றும் மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
செயலற்ற மாசுகட்டுப்பாட்டு வாரியம்
“எந்த மருத்துவமனையில் இருந்து இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து முறையற்ற வகை யில் கொட்டுகிறார்கள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அத னால், நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.” என்று மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் வியக்க வைக்கும் பதிலை கூறுகின்றனர். கண்காணிப்பை அதிகப்படுத்தி மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் நட வடிக்கை எடுத்ததுபோல் தெரிய வில்லை. நிர்வாகத்தின் செயலற்ற தன்மையாக, ஒவ்வொரு ஆண்டும் இதனால் ஏற்படும் பாதிப்புகள், அதன் விளைவாக உருவாகும் வியாதி களுக்கும் மரணங்களுக்கும் பொறுப்பேற்பதுமில்லை. திருமங்கை ஆழ்வாரத்தில் ஜே.கே. கல்குவாரிக்கு அருகில் பயன்பாட்டில் இல்லாத 500 அடி ஆழம் உள்ள குவாரியில், கழிவுநீர் மற்றும் மனிதக் கழிவுகளை, கழிவு நீரகற்று வாரியமே லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகிறது. இதனால் மக்களுக்கு பயன்பட வேண்டிய குவாரி தண்ணீர், மேலும் மாசடைந்து நோய் பரப்பும் கிடங்காக மாறியுள்ளது. “இது குறித்து பலமுறை மாநகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நட வடிக்கை எடுக்க மறுக்கின்றனர். கழிவுகளை யார் கொட்டுகிறார்கள் என்று சரியாக தெரியவில்லை என்று பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் பதிலளிக்கின்றனர்” என்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ஆதாரம் அளித்தும் நடவடிக்கை இல்லை
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமே மருத்துவ கழிவு களை அப்புறப்படுத்துவதை கண்காணிக்க கூடிய, விதிகளை மீறு பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரே கண்காணிப்பு அமைப்பாகும். ஆனால், வாரிய அதி காரிகள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் மற்றும் மனித உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல மெத்தனமாக நடந்து கொள்கின்றனர். இதுதொடர் பாக “தகுந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் கொடுத்தால் கூட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன் கூறுகிறார். இந்த பிரச்சனைகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி 31வது வார்டு கவுன்சிலர் சித்ராதேவி முரளிதரன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதன்மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டி உள்ளது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் நிலையான திடக்கழிவு மேலாண் மையை எப்படி செயல்படுத்துவது என விரிவாகவும், உள்ளீடாகவும் அரசு ஆலோசிக்க வேண்டும். நிலையான திடக்கழிவு மேலாண்மையில் “திறந்த வெளியில் கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்” என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. அதில் மருத்துவக் கழிவுகளும் அடங்கும். எனவே, தமிழக அரசும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாக மும் உடனடியாக இது போன்ற இடங்க ளில் ஆய்வுகளை மேற்கொண்டு சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். திரு நீர்மலைப் பகுதியில் கைவிடப்பட்ட கல்குவாரிகள், அதனைச் சுற்றி யுள்ள நீர்த்தேக்கங்களை சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஆவன செய்ய வேண்டும். சுற்றுச் சூழல் மாசைத் தடுத்து மக்கள் உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
- சுசீந்தரா ஆராய்ச்சி மாணவி