சென்னை,மார்ச் 3 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தனது தோழி யுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு விளை யாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்ப டையில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, செல்வராஜ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட் டுள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்ட னையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.