அரியலூர், ஏப்.24 - அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை சாந்தா (30) என்பவர் வீட்டு வேலைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பலர் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில் உடந் தையாக இருந்து, பலாத்காரம் செய்த லாட்ஜ் உரிமையாள ரான செந்துறை அருகே உள்ள சித்துடையார் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (45) என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டதை யடுத்து கந்தசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.