விக்கிரவாண்டி, ஜூன் 20- விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு கிராமம், தலித் பகுதியை சேர்ந்த முத்து மகன் கண்ணன் (35), அவரது மனைவி தேவகி (30) மற்றும் மூன்று குழந்தைகளுடன் திங்களன்று (ஜூன் 20) விழுப்புரத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது தங்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவலர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் தடுத்து நிறுத்தினர். பிறகு, நடத்திய விசாரணையில் இலவச வீடு கட்டுவதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தகராறு செய்து வருவதாகவும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.