districts

img

வேலம்மாள் பள்ளியின் ஆண்டு விழா

சென்னை, ஜன.12- சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் முதல்வர் அனுராதா ஈஸ்வரா தலைமையில் நடைபெற்றது. ஊடகவியலாளரும் மாண வர்களுக்கு திறன் வளர்ச்சிகான பயிற்சி வழங்குபவருமான ஹேமா ராக்கேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்கள் சிறந்து விளங்க இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று குடும்பம்,  மற்றொன்று பள்ளி. இவை இரண்டும் சிறப்பாக அமைந்தால் குழந்தைகளின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும். குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் தினசரி குறைந்தது அரை மணி நேரமாவது பேச வேண்டும். ஆனால் இன்றைக்குள்ள குடும்பத்தின் நிலை மிக கடினமாக உள்ளது. எனவே பெற்றோர்கள் எவ்வளவு பணிகள் இருந்தாலும் தங்கள் குழந்தைகளோடு அன்றாடம் பேசுவது அவசியம். எனவே நம் குழந்தைகள் இந்த சமூகத்தில் சிறந்த மனிதராக உருவாக வேண்டும்.  அப்படி உருவானால்தான் நமது நாடு மிக சிறப்பான நாடாக அமை யும் என்று வலியுறுத்தி பேசினார். பள்ளியில் சிறந்து விளங்கிய மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவர்கள் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் 3000 பேர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக இருந்தது. இந்நிகழ்வில் பள்ளியின் இணை இயக்கு னர் ஞானசேகரன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து. கொண்டனர்.