சென்னை,மே 7- பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான் சாவடி வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை துரிதமாக முடிக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி சனிக்கிழமை முதல் கரையான் சாவடியில் இருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்ல கனரக வாகனங்களான பஸ், லாரி , டிரக் செல்ல அனுமதி இல்லை. ஆனால் ஆம்புலன்ஸ், இலகு ரக வாகனம், இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி உண்டு.