சென்னை, ஜூன் 26, நாட்டில் காச நோய் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை சேத்துப் பட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர்- கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் அவர் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மாதிரி சேகரிப்பு மையம், அதிநவீன ஆய்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் மாண்டவியா கேட்ட றிந்தார். தொடர்ந்து, அதிகாரி களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் காசநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர், காச நோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, காசநோய் குறித்த அறிக்கை அடங்கிய புத்தகத்தை அமைச்சர் மாண்டவியா வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மருந்து கிடங்கில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருந்து கிடங்கின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்ச ரிடம் அதிகாரிகள் எடுத்துரைத் தனர். தொடர்ந்து சென்னை மணலியில் உள்ள உரத்தொழிற்சாலை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உர தொழிற்சாலையில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர், அதன் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.