சென்னை,ஜூலை 16- குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் உள்பட மூன்று பேர் சென்னையில் வாக்களிக்க வுள்ளனர். சட்டப் பேரவைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் அவர்கள் மூவரும் தங்களது வாக்குகளை திங்கள்கிழமை செலுத்தவுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப் பதிவுக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவைச் செயலகத்தின் குழுக் கூட்ட அறையில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் காத்திருந்து தங்களது வாக்கு களைப் பதிவு செய்யவும், வாக்குப் பதிவில் ரகசியம் காக்கவும் உரிய நடவடிக்கைகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகளான சட்டப் பேரவைச் செயலக உயரதி காரிகள் செய்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் இறுதி விவ ரங்கள் அந்தந்த மாநிலங்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் எங்கெங்கு வாக்களிக்கவுள்ளனர் என்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), எம்.செல்வராஜ் (சிபிஐ), கணேச மூர்த்தி (மதிமுக) ஆகியோர் தங்களது வாக்குகளை சென்னை யிலேயே செலுத்த விருப்பம் தெரி வித்துள்ளனர். இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணையத்தி டம் அளித்துள்ளனர். அதன்படி, அவர்கள் மூவரும் சட்டப் பேரவைச் செயலகத்தில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வரும் திங்கள்கிழமையன்று தங்களது வாக்குகளைச் செலுத்தவுள்ளனர்.