புதுச்சேரியில் பொதுமக்கள் அச்சம்
புதுச்சேரி, மே 12- புதுவையில் கொரோனா 2ஆவது அலை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பரவ தொடங்கியது. தேர்தல் நேரத்தில் படிப்படி யாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிக ரிக்கத் தொடங்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் உறுதியான நடவடிக்கையை எடுக்க முடியா மல் அதிகாரிகள் தயங்கி வந்தனர். இந்நிலை யில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜனதா கூட்டணியின் முதலமைச்சராக ரங்கசாமி மட்டும் கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றைய தினம் 3 கோப்பில் மட்டும் ரங்கசாமி கையெழுத்திட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின் 9ஆம் தேதி சட்டசபைக்கு வந்த ரங்கசாமி 20 நிமிடம் மட்டும் பணிகளை கவனித்துவிட்டு வெளி யேறி விட்டார். உடல்நலக்குறைவால் பாதித்த அவ ருக்கு பரிசோதனை நடத்தியபோது கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தாலும், மக்க ளாட்சி அதிகாரத்திற்கு வராத நிலை உள்ளது. தற்போது புதுவையில் கொரோனா பர வலை தடுக்க தளர்வுகளுடன் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நிவாரணமும் அறிவிக்கப் படவில்லை. அதேபோல் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னைக்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். புதுவை யில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேருவதில்லை. இது, புதுவை மக்களிடையே அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. புதுவையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு ஒரே நாளில் 30 பேர் கொரோனா வுக்கு பலியாகி உள்ளனர். இதில் 14 வயது சிறுமி, 25 வயது கல்லூரி மாணவி உட்பட 14 பெண்களும் அடங்குவர். இதுவரை மாநிலத்தில் 1,018 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலை யில் அரசு பதவியேற்றும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது, நிவாரணம் வழங்காதது, மருத்துவக்கல்லூரிகள் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவை புதுவை மக்களை அச்சமடையச் செய்துள்ளது.