கிருஷ்ணகிரி, ஜன .20- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.45 நாட்களுக்குள் முள்ளங்கி அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். இதனை பயிரிட ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்தாண்டு 1 கிலோ 30 ரூபாய் வரை விற்றது. இதனால், விவ சாயிகளுக்கு சிறிதளவு லாபம் கிடைத்தது. கடந்த 10 நாட்கள் முன்பு வரை 1 கிலோ ரூ.20 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது ஓசூர் உழவர் சந்தையில் கிலோ 12 க்கு விற்கிறது. வயலில் நேரடியாக சென்று வாங்கும் வியாபாரிகள் கிலோ 10 ரூபாய்க்கு கூட கேட்பதில்லை. இதனால் பல வயல்களி லும் முள்ளங்கி பிடுங்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. கெலமங்கலம் அருகே காடு உத்தனப்பள்ளி விவசாயி பிரகாஷ் தன் 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த முள்ளங்கியை, டிராக்டரை ஓட்டி அழித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், முள்ளங்கியை விலைக்கு கேட்க ஆளில்லை.அவற்றை பறித்து சந்தைக்கு கொண்டு சென்றால் பறிப்பு கூலி,வாகன செலவுக்கு கூட கட்டுபடியாகாது.ஏற்கெனவே நஷ்டமடைந்த நிலையில் மேலும் அறுவடைக்கு செலவு செய்ய முடியாது என்பதால் முள்ளங்கி வயலில் டிராக்டர் ஓட்டி அளிப்பதாக கூறினார்.