10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம்
சென்னை, மே 2- தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு மாதத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் வாக்கு கள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. மொத்த உள்ள 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் பெரிய வந்ததில் இருந்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த முன்னிலை நிலவரம் தொடர்ந்து அதிக ரித்துக் கொண்டே இருந்தது. எனவே, 10 ஆண்டு களுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. இத னால் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக்கு தமி ழக மக்கள் முடிவுரை எழுதினர். இதனால் திமுகவி னர் மிகுந்த உற்சாகமடைந் துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரும் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை அமைதியாக கொண்டாடி வருகின்றனர். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளும் ஐஏஎஸ் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.