districts

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

தஞ்சாவூர் ஜூன்.19-- சிங்கப்பூர் தமிழர் சார்பில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன்  செறிவூட்டிகள், தஞ்சை வந்திருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம்  வழங்கப்பட்டது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்  ராஜேஷ் மோகன்  இலரா. இவர், மன்னார்குடியில் பள்ளிக் கல்வியை முடித்து, கோவை அமிர்தா பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து, சிங்கப்பூரில் மேல்நிலை பொறியியல் படித்தார். பின்னர், சிங்கப்பூர் பொறியியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகி, இயந்திர மனிதன் ரோபோ துறையில் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தினார்.  இதையடுத்து, சிங்கப்பூர் அரசின் ஊக்குவிப்பால், அரசோடு தானும் இணை நிறுவனராகவும், பங்குதாரராகவும் லயன்ஸ் போட் இன்டர்நேஷனல் என்ற வீடுகளை தூய்மைப்படுத்தும் இயந்திர மனிதனை உரு வாக்கி விற்கும் நிறுவனத்தை  சிங்கப்பூரில் நடத்தி  வருகிறார்.

          இரண்டாவது அலையில் கொரோனா வின் தீவிரமானது ஆக்சிஜன் பற்றாக் குறையை ஏற்படுத்தி, உயிரை பறிக்கின்ற கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. மக்களின் உயிரைக் காக்க போராட வேண்டியுள்ளது. முதல்வரும் வெளிநாட்டில் வசிக்கின்ற தமிழர்கள் மற்றும் மனிதாபிமான ஆர்வலர்கள் உதவியை கோரியுள்ளார். அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதர வளிக்கும் வகையிலும், தான் பிறந்த மண்ணின் மக்களை காக்க ஏதாவது உதவி கள் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன்   சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள தமிழ ரான, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யை சேர்ந்த ராஜேஷ் மோகன் இலரா தமது நிறுவன பணியாளர்களின் உதவியுடன் கொரோனா சிகிச்சைப் பணிக்காக  ரூ-30 இலட்சம் மதிப்புள்ள 33 ஆக்சிஜன் செறி வூட்டிகளை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பயன்பாட்டிற்கென வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, தஞ்சாவூர் வந்த  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியனிடம், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு ஜி.இரவிக் குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ச.மருதுதுரை ஆகியோர் முன்னிலை யில், இலராவின் சிறிய தந்தையாரும், மன்னார்குடி இருதய சிகிச்சை மருத்துவரு மான இலரா பாரதிசெல்வன்  வழங்கினார்.