districts

img

8கி.மீ நடந்து வந்து படிக்கும் மாணவர்கள் ஆட்டோ வாங்கி கொடுத்த ஆசிரியர்கள்

சங்கராபுரம், மார்ச் 27 - பள்ளிக்கு தினசரி நடந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ஆசிரி யர்கள் தங்கள் சொந்த செலவில் ஆட்டோ வாங்கி கொடுத்த நிகழ்வு நெகிழ்ச் ்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சோழம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. மூரார்பாளையம், வனக்காடு, நெடுமானூர், காட்டுக்கொட்டாயர் போன்ற பகுதியில் இருந்து 130 மாணவ, மாணவிகள் வந்து பயில்கின்றனர். போதிய பேருந்து வசதி இல்லா ததால் இந்த கிராமங்க ளில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் சில மாணவர்களின் பள்ளி படிப்பை நிறுத்தி விட லாம் என பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனை அறிந்த பள்ளி தலைமை யாசிரியர் கந்த சாமி, ஆசிரியர்கள் திலிப்கு மார், ஜோஸ்பின்மேரி, கலையரசி, சுதா, சாஷிதா பேகம் ஆகியோர் முன்வந்து தங்களது சொந்த செலவில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ வாங்கி கொடுத்தனர். குறை ந்த ஊதியத்தில் ஆட்டோவை இயக்குவதற்கு ஓட்டுநர் வேல்முருகன் என்பவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் கந்தசாமி கூறுகை யில், பள்ளிக்கு மாணவ, மாணவிகள் நடந்து செல் வதை பார்த்து மன வேதனை அடைந்தோம். ஒருநாள் 2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சோர்ந்து கிடந்தனர். அதைப் பார்த்து அவர்களை விசாரித்த போது, நீண்ட தூரம்நடந்து வந்ததால் கால் வலி,உடல் சோர்வு, மற்றும் பசி மயக்கம் என்று கூறினார்கள். இதேபோன்று15க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருவது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து சொந்த செலவில் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளோம். மேலும், மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் பள்ளியில் முதலு தவிஅளிக்கவும்ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.