திருவண்ணாமலை,ஜூலை 15-
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள தண்டரை கிராமம் ஆரம்பப் பள்ளி யில் 60 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 95 மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இந்த இரு பள்ளி களுக்கும் சேர்த்து உயர்நிலைப் பள்ளியில் ஒரே இடத்தில் மதிய உணவு சமைக்கப்படுகிறது. அந்த உணவில் சனிக் கிழமை ஜூலை 15 அன்று பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்த உணவை சாப்பிட்ட இரண்டு பள்ளி களையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவண்ணா மலை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.