districts

img

திருவான்மியூர் கடற்கரையில் கட்டுமானப்பணி தடுத்துநிறுத்தம்

சென்னை, ஜூன் 14 சென்னை திருவான்மி யூர் கடற்கரையில் ஆறு படைமுருகன் கோவில்  அருகில் உள்ள பகுதியில் புதியதாக கட்டுமானப் பணி நடைபெற்று வருவதாக, ஒரு நாளிதழில் செய்தி வெளி யாகி இருந்தது.

கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதியை மீறி அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து புதிதாக கட்ட டம் கட்ட மண் தோண்டி அஸ்திவார பணி தொடங்க ப்பட்ட நிலையில் மாநகராட்சி ஆணையர்  அந்த இடத்தை பார்வை யிட்டு  பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். இதை யடுத்து  தோண்டப்பட்ட  குழிகள்  மண்ணைகொண்டு முழுவதுமாக நிரப்பப்பட்டு சமன் செய்யப்பட்டது.

அரசு கடற்கரை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்த நபர் மீது  சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை யிடம் புகார்  அளிக்கப்பட்டு ள்ளது என்று மாநகராட்சி கூறி யுள்ளது.