districts

தளவாட பொருட்கள் தட்டுப்பாடு

சென்னை, டிச. 16 - மத்திய சென்னை மின்  பகிர்மான வட்டத்தில் எழும்பூர், மயிலாப்பூர், அண்ணா சாலை, தி.நகர் என 4 கோட்டங்கள் செயல் படுகின்றன. தற்போது ஐந்தாவது கோட்டமாக சேப்பாக்கம் கோட்டம் உதயமாகியுள்ளது. இந்த ஐந்து கோட்டங்களிலும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் உள்ள னர். நுகர்வோரிடம் இருந்து தினசரி மின்னகம் வாயிலாக மின் தடை தொடர்பாக நூற் றுக்கணக்கான புகார்கள் வருகின்றன. மின்தடையை சரி செய்வது, மின் மாற்றி களை பராமரிப்பது, மேம் பாட்டு பணிகளை செய்வது, பில்லர் பராமரிப்பது போன்ற பணிகளை  செய்திட தேவை யான தளவாட பொருட்கள் இல்லை. குறிப்பாக, 11 கேவி ஜாயின்ட் கிட், 33 கேவி ஜாயி ன்ட் கிட், எல்டி ஜாயின்ட் கிட், 240 ஜாயின்ட் கிட், 120 ஜாயின்ட் கிட், 120 கேபிள்,  ஸ்டம்ப் போல்ட், 240 லெக்,  இன்சுலேட்டர் போன்ற  பொருட்கள் இல்லாமல்  ஊழியர்கள் திண்டாடு கின்றனர். நிர்வாகத்திடம், பிரிவு அலுவலர்கள் பொருட் களை கோரினால், தற்காலிக முன்பணம் (டெம்ரவரி அட்வான்ஸ்) பெற்றுக்  கொள்ள அறிவுறுத்துகின் றனர். இத்தகைய தளவாட பொருட்கள் வாங்க பிரிவு  அலுவலர்கள் தங்களது ஊதியத்தை செலவிட நேரு கிறது. இதனால், ஊழியர் கள் மின் நுகர்வோர்களிடம் தளவாட பொருட்கள் வாங்க கையேந்தும் நிலை உள்ளது. எனவே, களப்பிரிவிற்கு தேவையான தளவாட பொருட்களை நிர்வாகம் கொள்முதல் செய்து பிரிவு  அலுவலகங்களுக்கு வழங்க கோரி தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மத்திய சென்னை கிளை செய லாளர் எஸ்.கண்ணன், மேற் பார்வை பொறியாளருக்கு அனுப்பி உள்ள கடித்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.