districts

img

பெரம்பூரில் அரசு புறநகர் மருத்துவமனை அமைத்திடுக

சென்னை, நவ. 3- பெரம்பூர் பகுதியில் அரசு புறநகர் மருத்துவமனை அமைக்க வேண்டும் என சிபிஎம் பெரம்பூர் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 24ஆவது மாநாடு கொடுங்கையூரில் தோழர் வி.பாண்டியன் நினைவரங்கில் ஞாயிறன்று (நவ. 3) நடைபெற்றது. மூத்த தோழர் எஸ்.காசிநாதன் கட்சிக் கொடியை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோட்டீஸ்வரி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திக் வரவேற்றார். மாவட்டக் குழு  உறுப்பினர் எம்.ராஜ்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.வெற்றிராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், ஆர்.லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  தீர்மானங்கள் பெரம்பூர் பகுதியில் அரசு புறநகர் மருத்துவமனை அமைக்க வேண்டும், குடிமனை பட்டா மற்றும் விற்பனை சான்றிதழ் கிடைக்காத அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் தேர்வு 11 பேர் கொண்ட பகுதி குழுவின் செயலாளராக அ.விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.