சிதம்பரம், ஜூலை 15-
சிதம்பரம் நகரத்தில் ரூ. 16 கோடியில் திட்டப்பணிகள் நடை பெற்று வருவதாக தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் நகராட்சி கூட்டம் மன்றத் தலைவர் கே.ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பிரபாகர், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000, நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பி னர்களுக்கு மதிப்பூதியம் அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
நகர்மன்றத் துணைத் தலை வர் முத்துக்குமரன், மன்ற உறுப்பி னர் தஸ்லிமா (சிபிஎம்), திமுக உறுப்பி னர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு, சந்திரசேகர் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய நகர மன்றத் தலைவர் செந்தில்குமார், “ வக்காரமாரி நீர்த்தேக்கம் சீரமைப்பு, மானா சந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி யின் அருகே ஆழ்துளை கிணறு, சாலை களில் எல்இடி மின் விளக்குகள் பொருத்துவது, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ. 16 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக ரூ. 9 கோடியில் மேலவீதி, தெற்கு வீதிகளில் மழை நீர் வடிகாலுடன் சாலையோர நடை பாதை இரும்பு தடுப்பு வேலி அமைத்து அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.