districts

img

ரூ. 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது சென்னை சேப்பாக்கம் மைதானம்

சென்னை, மார்ச் 16- சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்த லுக்கு மாநில அரசின் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. ரூ.139 கோடி செலவில் சேப்பாக்கம் மைதானம் 62,000 சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக  விரிவாக்கம் செய்யப்படுகி றது. விரிவாக்கம் செய்யப் படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் மைதா னம் தயாராகிறது. அதில் நீர்நிலை, நீரோட் டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் செய்யக்கூடாது என்ற நிபந்த னையை தமிழக அரசு விதித்திருக்கிறது. மேலும் அங்கு மரங்களை வெட்ட அனுமதி இல்லை எனவும், அருகில் வசிக்கும் மக்க ளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறது.