districts

img

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி, ஆக. 25- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஓபசமுத்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓப சமுத்திரம் கிராமத்தில் உள்ள மண்ணடி தெரு  உள்பட்ட 2 தெருக்களில் மொத்தம் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த பகுதி மக்க ளுக்கு ஊராட்சி நிர்வாகத்தால் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படு கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திட மும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவ லகத்திலும் அப்பகுதி மக்கள் பலமுறை  புகார் அளித்தும், பல்வேறு போராட்டங் களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் பகுதிக்கு முறை யாக குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக அந்த வழியாக சென்னை செங்  குன்றம் நோக்கி சென்ற அரசு பேருந்தை யும் அவர்கள் சிறை பிடித்தனர். அந்த  பேருந்தில் சிகிச்சைக்காக பலர் மருத்துவ மனைக்கு செல்ல இருந்ததால், சிறை பிடித்த  பேருந்தை பொதுமக்கள் உடனடியாக விடுவித்தனர். இருப்பினும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி கள் வாசுதேவன், நடராஜன் மற்றும் ஆரம்பாக்  கம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது சீரான மின்சாரத்திற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருப்பதால் தண்ணீர் தட்டுபாடு  ஏற்படாது என்றும், பழைய  மேல் நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிக்கு பதில் புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி  அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யப்  பட்டு ஒரிரு நாளில் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.