காஞ்சிபுரம், ஏப். 26- 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் லாரண்ஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் மகேஸ்வரி ரவிக்குமாரி டம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத் தில் 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்காமல் புறக்கணிக் கின்றனர். இது குறித்து அதி காரிகளிடம் கேட்டபோது, கொரோனா தொற்று வய தானவர்களை அதிக அள வில் பாதிப்பதால் வேலை வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த புத்தேரி ஊராட்சியில் கிரா மப்புற ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் வசிக்கின்ற னர். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள இவர்கள் ஏற்கனவே, வாழ் வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் 100 நாள் வேலை அவர்க ளுக்கு ஆறுதலாக இருந்தது. இந்த வேலையும் இல்லா விட்டால், அந்த குடும்பங்கள் மிகவும் வேதனைக்கு உள் ளாக்கப்படும். எனவே, தனிமனித இடை வெளியுடன் அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வேலை வழங்க முடியாத காலத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.