districts

img

ஓசூர்- ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.22 - ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டையை இணைக்கும் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா வை நேரில் சந்தித்து மனு அளித்தார். கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இத்திட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தொழில் வளர்ச்சியில் உலக அளவில் 16-வது இடத்தில் உள்ள ஓசூரின் முக்கியத்துவத்தையும், இத்திட்டம் அமைந்தால் மாவட்டத்தின் தொழில் முனைவோர் மற்றும் பொது மக்களுக்குக் கிடைக்கும் போக்குவரத்து வசதிகள் குறித்தும் அமைச்சரிடம் அவர் விளக்கினார். கடந்த காலங்களில் ஒன்றிய அரசு இத்திட்டம் தொடர்பாகப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தும், இன்னும் செயல்பாட்டிற்கு வராத நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்திற் காகத் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அளித்த மனுவை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் சோமண்ணா, வரும் ஜனவரி முதல் வாரத்தில் நேரில் வந்து ஆய்வு நடத்தி, பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு ஆணையிடுவதாக உறுதி யளித்துள்ளார்.