திருவள்ளூர், செப் 3- கால் இழந்த நிலையில் வேலை தர நிர்வாகம் மறுத்ததால் விரக்தியில் தொழி லாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி, ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமையன்று (செப் 3) அன்று தனியார் சரக்கு பெட்டகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மீஞ்சூர் அருகே நாலூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் அப்பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கிரேன் மூலம் சரக்கு பெட்ட கத்தை அடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென கிரேனின் இணைப்பு பட்டை அறுந்து, சரக்கு பெட்டகம் அவரது வலது காலில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் நடமாட முடியாத நிலைக்கு ஆளானார். இதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. மேலும் வருவாய் இன்றி தவித்த அவர் தனது உடல் நிலைக்கு தகுந்த பணி வழங்கு மாறு விடுத்த கோரிக்கையும் நிரா கரிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியில், தனது மரணத்திற்கு சரக்கு பெட்டக முனைய நிர்வாகமே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இதையொட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்ட லோகநாதனுக்கு இழுப்பிடு வழங்க கோரியும், அவரை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சரக்கு பெட்டக முனையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.