districts

img

ஞாயிறு ஏரியில் அரசு மண் குவாரி செயல்பட பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், மார்ச் 29- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அரு கில் உள்ள ஞாயிறு முதல் நிலை ஊராட்சி யில் உள்ள ஞாயிறு கிராம ஏரியில் 7000 லோடு அளவிற்கு சவுடுமண் எடுத்துக்  கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதித் துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஞாயிறு கிராமத்தைச் சுற்றிலும்  உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம், குடிநீர் பாதிக்கும் அபாயமும் உள்ளது. ஏரியில் மண் அள்ளுவதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழங்கு தொடுத்து நிலுவையில் உள்ள நிலையில் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும்  தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி மன்ற நிர்வா கத்தின் எதிர்ப்பையும் மீறி மண் அள்ளப் படுகிறது. கொரோனா நோய்தொற்று உள்ள  நிலையில் மக்களின் நலன் கருதி சவுடு மண் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனு மதியை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி திங்களன்று ( மார்ச் 29)   ஞாயிறு  கிராம பேருந்து நிலையம் அருகில் ஊராட்சி  மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன் தலைமை யில் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விடுதலை செய்க: சிபிஎம் கைது செய்யப்பட்டவர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது. இது குறித்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர்  மாவட்ட செயலாளர் எஸ் கோபால் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோழவரம் அருகில் உள்ள ஞாயிறு  கிராமத்திறகு உட்பட்ட ஏரியில் விதிமுறை களை மீறி கடந்த ஒரு வாரமாக சவுடுமண்  எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அரசு  குவாரியை  ரத்து செய்ய வேண்டும் என  வலி யுறுத்திய ஊராட்சி மன்ற தலைவர் எல்லை யன் மற்றும் கிராம பொது மக்களை காவல்  துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கும்  நடவடிக்கையை  எடுத்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.இது தேர்தல் காலம் என்பதாலும், கொரோனா  நோய் தொற்று காலம் என்பதால் கைது செய்  யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை  செய்ய வேண்டும். மேலும் விவசாயத்தை,  குடிநீரை பாதிக்கும் அரசு குவாரி ரத்து செய்ய  வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.