செங்கல்பட்டு. ஜூலை 20- பழுதடைந்த நிலையில் உள்ள மணிக்கூண்டை புது பிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நக ராட்சிக்குட்பட்ட ஜிஎஸ்டி சாலையில் உள்ள ரயில் நிலையம் அருகே பழைமை வாய்ந்த மணிக்கூண்டு உள் ளது. இந்த மணிக்கூண்டு செங்கல்பட்டு முனிசிபல் சேர்மனாக இருந்த ராவ்பக தூர் வேதாசலம் முதலியா ரின் பொண்விழாவினை கொண்டாடும் வகையில் 1953ஆம் ஆண்டு அப்போ தைய சென்னை மாநில அமைச்சர் கிருஷ்ணராவ் என்பவரால் அடிக்கல் நாட் டப்பட்டு 1954ஆம்ஆண்டு அப்போதைய சென்னை மாநில நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் என்பவரால் துவக்கிவைக்கப்பட்டது. கலை நயத்துடன் வடி வமைக்கப்பட்ட இந்த மணிக்கூண்டில் நான்கு பக்கமும் செயல்பட்டு வந்த கடிகாரங்கள் செங்கல்பட்டு மக்களுக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயயன்பட்டு வந்தது. செங் கல்பட்டு நகராட்சியின் ஒரு பகுதிக்கு முகவரியாகவே மாறிப்போன இந்த மணிக் கூண்டு கடந்த சில ஆண்டு களாக பழுதடைந்து பரா மரிப்பு இல்லாமல் இருக்கி றது. கடந்த 2013ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகர அரிமா சங்கத்தால் புதுபிக்கப்பட்டு நான்கு கடிகாரங்களும் புதி தாக வாங்கி பொருத்தப்பட்ட நிலையில் மீண்டும் பரா மரிப்பு இல்லாததால் தற் போது கலை இழந்து காணப்படுகின்றது. தற்போது செங்கல்பட்டு புதிய மாவட்டமாக துவங் கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மாவட்டத் தின் தலைநகராக செயல் பட்டுவரும் செங்கல்பட்டு நகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மீண்டும் இந்த மணிக் கூண்டை புதுபிக்க வேண்டும் என செங்கை நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.