சென்னை, ஜன. 24 - தி.நகர், தனக்கோடி அம்மாள் தோட்டம், முத்து ரெட்டி தோட்டம் பகுதி மக்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜஷ் லக்கா னியை சந்தித்து கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முரு கன், தி.நகர் பகுதிச் செய லாளர் இ.மூர்த்தி மற்றும் எம்.குமார் ஆகியோர் மனு அளித்தனர். அதில்,தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 133வது வட்டம் தனக்கோடி அம்மாள் தோட்டம், முத்து ரெட்டி தோட்டத்தில் பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் ஒரு பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டது. மேலும் ஒரு பகுதிக்கு மின் இணைப்பு தேவைப்படு கிறது. அண்மையில், அண்ணா சாலை கோட்டம், திருவட் டீஸ்வரன் பேட்டை பிரிவு, பார்டர் தோட்டம், எல்ஜி என் சாலை பகுதிக்கு மின் இணைப்பை வழங்கப்பட் டுள்ளது. அதுபோன்று, தனக்கோட்டி அம்மாள் தோட்டம், முத்து ரெட்டி தோட்ட மக்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. “மனுவைப் பெற்றுக் கொண்ட மின்வாரியத் தலை வர், உரிய ஆய்வுகளுக்கு பின் மின்சாரம் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்ததாக சிபிஎம் தலைவர்கள் தெரி வித்துள்ளனர்.