சென்னை, ஜூலை 4-
சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதில் 3ல் ஒருபகுதியினர் பெண்கள் ஆவர். மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி உள்ளது. அதனை மேம்படுத்துவது குறித்து நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு எந்த பகுதியில் தேவை, இன்னும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியாளர்கள் எந்தெந்த பகுதிக்கு அதிகப்படுத்த வேண்டும். பாதுகாப்பு குறைவான இடங்கள் எவை? என்பது பற்றி பெண்களிடம் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.