“இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சி திங்கட்கிழமை(செப்.5) பெரம்பூர் சத்திய மூர்த்திநகர் முல்லை நகர் பேரூந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன்,மத்தியகுழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத்,பெ.சண்முகம், முன்னாள் எம்பி டி.கே.ரங்க ராஜன், முன்னாள் எம்எல்ஏ அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். முன்னதாக மாலை 3மணிக்கு புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என வட தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.