திருவள்ளூர், ஜன. 20- அனுபவத்தில் உள்ள வீட்டுமனைகளை வேறு நபர்களுக்கு பட்டா கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் திங்களன்று (ஜன 20) முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றி யத்திற்குட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் அடங்கிய ரெட்டிபாளையம் கிராமத்தில் 6 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடத்தை மன்னர்கள் காலத்தி லிருந்து ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலத்தை தற்போது மற்றொரு கிராமத்தை சேர்ந்த 150 குடும்பத்திற்கு பட்டா கொடுப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்கு ரெட்டிபாளையம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரெட்டிப்பாளையத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் 3 குடும்பங்கள் வீதம் வசிப்பதால் தங்களுக்கே அந்த இடத்தை பட்டா செய்து தர வேண்டும் எனக் கூறி பலமுறை கோரிக்கை அளித்தும் வரு வாய்த்துறை அலுவலர்கள் செவிசாய்க்க வில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான போக்கை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். பின்பு கோட்டாட்சியர் அலுவலக வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரடியாக வந்து பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்தார். பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்திடம் இதுகுறித்து பேசினார். மேலும் அவர் தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசி இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.