திருவண்ணாமலை, ஜன.20- மத நல்லிணக்கம் தேசமெங்கும் தொடர வேண்டும் என திருவண்ணா மலையில் நடைபெற்ற தமிழர் திரு நாள் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் அருணை தமிழ்ச்சங்கம் சார்பில், தமிழர் திரு நாள் விழா (ஜன.19) ஞாயிறு அன்று நடைபெற்றது. சென்னை இசை கல்லூரி மாணவிகள் இசை நிகழ்ச்சி யுடன் துவங்கிய விழாவில், பரத நாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், நிகழ்ச்சிகள் மாலையில் போர்ப்பறை, தெருக்கூத்து, கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அருணை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அமைச்சர் எ.வ.வேலு பேசிய போது, மத வேறுபாடுகள் பாராமல் அனைத்து மதத்தினரும் இணைந்து தமிழ் மொழிக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் அருணை சங்கம், கிருபானந்த வாரியார் பெயரில் வழங்கப்படும் ஆன்மிக தொண்டு கள் விருது இந்த விழாவில் இஸ்லாமி யருக்கு வழங்கப்படுகிறது என்றார். கவிப்பேரரசு வைரமுத்து பேசிய போது, திருவண்ணாமலையில் நிகழும் இந்த மத நல்லிணக்கம், தமிழ கம் தாண்டி தேசமெங்கும் தொடர வேண்டும். இந்த அருணை தமிழ்ச் சங்கம், தமிழ் மொழியில் உள்ள நுணுக்கங்களை மக்களிடையே பரவலாக்க வேண்டும். பெருவாரி யான இளைஞர்களிடம், தமிழை கொண்டு சேர்க்க வேண்டும். வரும் காலங்களில் இந்த சபையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் தமிழ்தொண்டுக் கான மறைமலை அடிகளார் விருது திருக்குறள் காமராசுக்கு, சமூக தொண்டுகள் முத்துலட்சுமி ரெட்டி விருது ஹேமமாலினிக்கு, கலை தொண்டுக்கான கலைவாணர் விருது பாரி இளவழகனுக்கு, ஆன்மிக தொண்டுகள் கிருபானந்த வாரியார் விருது அப்துல் ரகுமானுக்கு, சமூக நீதி காவலருக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது பட்டாபிராமனுக்கு வழங்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் குறிஞ்சி நகரில் வசிக்கும் ஆர். ஜெகதீஷ் குமார் - செ.நீலாம்பரி தம்பதியினரின் மகள் நிவிஷா ஸ்ரீ ( 5) என்ற சிறுமி, ஸ்கேட் போர்ட் விளையாட்டுப் போட்டி யில், இளம் வயதில் தேசிய சாம்பி யன் பதக்கத்துடன் உலக சாதனை யும் நிகழ்த்தியமைக்கு பாராட்டு விருதை கவிப்பேரரசு வைரமுத்து வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பி னர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஎஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி. சரவணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தனுசு ஆகியோர் பங்கேற்ற னர். நிறைவாக, கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ. வே. கம்பன் பரிசு வழங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செய லாளர் கு.கருணாநிதி, நகர செய லாளர் கார்த்திக் வேல்மாறன், துணைச் செயலாளர் பிரியா விஜய ரங்கன், மேயர் நிர்மலா வேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அருணை தமிழ்ச் சங்க செயலாளர் வே . ஆல்பர்ட், பொருளாளர் எம்.இ. ஜமாலுதீன், துணைச் செயலாளர் எ.வ. குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.