சிதம்பரம், ஜன. 20- கரந்தை ஜெயகாந்தம். துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை மற்றும் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை இணைந்து சிதம்பரத்தில் திருவள்ளுவர் விழா நடத்தின. இந்த விழாவுக்கு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் மருத்துவர் சு.அருள்மொழி செல்வன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராகவன் வர வேற்றார். விழாவில் கடலூர் அரசு மாற்றுதிறன் (பார்வை யற்றோர்) பள்ளி இசை ஆசிரியர் சத்திய நாராயணன் திருமுறை இசையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அண்ணா மலை பல்கலைக்கழக தமிழ் மொழியியல் துறை முதல்வர் அரங்க. பாரி கலந்துகொண்டு “இலக்கியத்தில் அறம்” என்ற தலைப்பில் உரை யாற்றினார். இதனை தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சான்று, பரிசு கள் வழங்கினார்.