கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பணப்பயன் கிடைப்பதற்கான நடைமுறைகளை எளிமை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கை எம்ஜிஆர் மாவட்டம் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் டி.பாபு, ஆறுமுகம், வேணுகோபால் உள்ளிட்ட பலர் பேசினர்.