சென்னை, செப். 27 - மாதந்தோறும் 5ஆம் தேதி சம்பளம் வழங்கக் கோரி தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை தொழிலாளர்கள் செவ்வாயன்று (செப்.27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தற்காலிக, ஒப்பந்த, தூய்மை பணியாளர்கள், அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட தொழி லாளர்களுக்கு மாதம் தோறும் 5ஆம் தேதி சம்ப ளம் வழங்க வேண்டும், மாநகராட்சியாக மாறு வதற்கு முன்பிருந்து பணி யாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்த, தொழி லாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணைப்படி 624 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும், கொரோனா கால நிவாரணத் தொகை 15 ஆயிரம் ரூபாயை விரைந்து வழங்க வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு கால தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தாம்பரம் மாநக ராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் போராட் டம் நடத்துவதை அறிந்து மாநகராட்சி ஆணையர் வெளியே சென்றதால் தொழிலாளர்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பேசிய நகர சீரமைப்பு அதிகாரி பார்த்திபன், மாதந்தோறும் 5ஆம் தேதி சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும், அனைவருக்கும் அடை யாள அட்டை வழங்கப் படும். இதர கோரிக்கைகள் குறித்து ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.சி.முருகேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் என்..கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, சிஐடியு நிர்வாகிகள் எஸ்.அப்படி, ராஜன்மணி, ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.குமாரதாசன், இ. குழந்தைசாமி, தா.கிருஷ்ணா (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.