மன்னார்குடி, மே 25- மன்னார்குடி அருகே திருமக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் சித்த மருத்துவ முறை யில் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்ப டும் பிரிவினை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடங்கி வைத்தார். இம்மையத்தில் சித்த மருத்துவ வழிமுறைகள் மூலமாக லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. உள்ம ருந்துகளாக கபசுரக் குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூர ணம், ஆடாதொடை மணப் பாகு உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின் பாம், நீர்க்கோவை மாத்திரை போன்றவைகள் வழங்கப்ப டுகின்றன. உணவே மருந்து என்ற அடிப்படையில் மூன்று வேளை உணவுகளுமே பாரம்பரிய மூலிகை சத்து டையதாக வழங்கப்படு கின்றன.
பெருமருந்துகளாக லவங்காதி சூரணம், மஹா சுதர்சன சூரணம், மால்தேவி செந்தூரம், பூரணசந்தி ரோதய செந்தூரம் ஆகி யவை நோயாளிகளின் அறி குறிகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. 60 படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றால் பாதி க்கப்பட்டுள்ள முதல்நிலை நோயாளிகளுக்கு சித்தர் யோகா, மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோச னைகள் வழங்கப்படும். அத்துடன் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு “ஆரோக்கியம்” என்ற மருந்து பெட்டகம் வழங்கப்படும். இம்மருந்து பெட்டகத்தில் உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற சித்த மருந்துகள் இடம் பெற்றுள்ளன என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரி வித்தார். மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, மாவட்ட சித்த மருத்துவ அலு வலர் மரு.பத்மநாபன், மாவட்ட ஊராட்சித் தலை வர் தலையாமங்கலம் கோ. பாலசுப்ரமணியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணிமோகன் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.