districts

img

இடஒதுக்கீட்டை ஒழிக்கும் அவுட்சோர்சிங் சட்டமன்றத்தில் சிபிஎம் எதிர்ப்பு தெரிவிக்கும் சிஐடியு போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 10 - அரசு பணிகளை அவுட்சோர்சிங் செய்யும் அரசாணைகளை தாமத மின்றி அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலி யுறுத்தினார். சென்னை மாநகராட்சி யில் உள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப்பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 4 மண்டலங்களில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். இவர்களில் 6700 பேரை தவிர மற்றவர்கள் என்எம்ஆர், தொகுப்பூதியம், ஸ்வர்ண  ஜெயந்தி, சுய உதவிக்குழு என பல்வேறு பெயர்களில் சுரண்டப்படுகின்றனர். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் தூய்மை பணி, தூர்வாரும் வண்டி, ஜெட்ராடிங், சூப்பர்சக்கர் வாகன ஓட்டு நர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் தற்காலிக பணியாளர்களாக உள்ள னர். மாநகரத்தில் 15 அரசு பொது மருத்துவ மனைகளில் பணியாற்றும் லேப்டெக்னிஷியன், எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு இன்றி, குறைந்த பட்ச கூலி கிடைக்காமல், விடுமுறை உள்ளிட்ட எந்த சட்ட உரிமைகளையும் பெற முடியாதவர்களாக உள்ள னர். இந்த நிலையில் சமூக நீதிக்கு எதிராக அரசு பிறப்பித்துள்ள அரசாணை 152, பெரும்பாலான நிரந்தரப் பணியிடங்களை நீக்க வழி வகுக்கிறது.

அதாவது மாநகராட்சி, நகராட்சிகளில் ஆணையர் உள்ளிட்டு 3147 நிரந்தர பணி யிடங்களை மட்டுமே அனு மதிக்கிறது. தூய்மைபணி, மேற்பார்வையாளர், ஓட்டு நர் உள்ளிட்ட பணியிடங் களை தனியார் (அவுட் சோர்சிங்) வாயிலாக மேற்கொள்ள கூறுகிறது. எனவே, அரசாணை 152ஐ திரும்ப பெற வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச கூலியாக மாதம் 26ஆயி ரம் ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை மற்றும் சுகாதாரப் பணி களை தனியாருக்கு கொடுக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜன.10) சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம், பெரு நகர சென்னை அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழி லாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. போராட்டத்தை கே.பால கிருஷ்ணன் தொடங்கி வைத்த பின்னர்  செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,  “அரசாணை 152ன் படி, மாநகராட்சி, நகராட்சிகளில் உயர்மட்ட அதிகாரிகளை தவிர மற்றவர்களை அவுட்சோர்சிங் மூலமும், அர சாணை 115ன் படி, சி மற்றும் டி பிரிவு ஊழி யர் பணியிடங்களை அவுட் சோர்சிங் மூலமும் நிய மித்துக்கொள்ள வழிவகை செய்கிறது. அதாவது அரசுத்துறைகளில் 70 விழுக்காடு பணியிடங்கள் அவுட்சோர்சிங் மூலம் மேற்கொள்ளப்படும். இத னால் பணியாளர் தேர் வாணையம் இருக்காது; இடஒதுக்கீடு அழிக்கப்படும். பணி நிரந்தரத்தையே கேள்விக்குள்ளாகும் இந்த அரசாணைகளை தாமத மின்றி ரத்து செய்ய வேண்டும். தலைமை செயலக ஊழியர்களுக்கு அரசாணை 115 தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

பணியில் உள்ள தொகுப்பூதியம், மதிப்பூதியம் உள்ளிட்ட முறைகளில் பணி யாற்று கிறவர்களை கால நிர்ணயம் செய்து, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் குறித்து சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி குரலெழுப்பும். உழைப்பாளி மக்களை உயர்த்துவதாக அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். போராட்டத்திற்கு சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். எம்.தயாளன், பா.பாலகிருஷ்ணன் (சிஐ டியு), இ.ராஜன் (குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம்), ஜெ.பட்டாபி, பி. சீனிவாசலு, பி.ராஜேந்திரன், ஜி.முனுசாமி (செங்கொடி சங்கம்), பி.புஷ்பராஜ், இரா.அருள்குமார் (அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் போராட் டத்தை நிறைவு செய்து பேசினார்.