விழுப்புரம்,டிச.30- விழுப்புரம் மாவட்டம், கிராம ஊராட்சி களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் த.மோகன் உத்தர விட்டார். அந்த பணிகளை வெள்ளிக் கிழமை (டிச.30) ஆய்வு செய்தார். தற்போது, இம் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களி லுள்ள 688 ஊராட்சி மன்றங்களில் 2,286 கிராமங்களல் 3,689 மேல்நிலை நீர் தேக்க தண்ணீர் தொட்டிகள், 7562 சிறிய மின் விசை நீர் தேக்க தொட்டி கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு 2,280 பணியாளர்களும், சிறிய மின் விசை நீர் தேக்க தொட்டிகளுக்கு 1,672 பணியாளர்கள் உள்ளனர். பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய தேவையான குடி தண்ணீரை சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் வழங்கும் வகையில், மாவட்டம் முழுவதுமுளள நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தி யுள்ளார். இப்பணிகள் முறையாக நடைபெறு வதை உறுதி செய்ய வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்களும் நியமனம் செய்து கண்காணிக்கப்படுகிறது. இதனையடுத்து, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோலியனூர், பனங்குப்பம், தொடர்ந்தனூர், சாலை அகரம் ஆகிய ஊராட்சி மன்றங்களில் நடை பெற்ற பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். சரியான அளவில் குளோரின் கலந்து பொது மக்களின் தேவைகேற்ப சுத்த மான குடிநீரினை விநியோகம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.